புதன், 4 பிப்ரவரி, 2009

ஒற்றுமைக்கு ஒரே சொல் தமிழன் ..

சாதிக்காகவும் ,தன் மதத்துக்காகவும், கொள்கையையும் மானத்தையும் அடகு வைக்கும் தமிழன்.
பிற நாடு மற்றும் இனத்திடம் அடிமையாகவே வாழ விரும்பும் .தமிழன் ஒரு தமிழன் கீழ் வாழ விரும்ப மாட்டான் .

அந்த நற்குணத்தின் பட்டியல்.

1.இத்தருணத்தில் கிரிக்கட்டை புறகணிப்போம் என்று .தமிழன் குரல் கொடுத்தால்.
அவன் சொல்ல நான் ஏன் கேட்கவேண்டும .(தமிழிஷிலும் அந்த ஒற்றுமைய பார்த்தோம்) .இந்த விஷயத்தில் மக்கள் தொலைக்காட்சிக்கு என் வாழ்த்து.கிரிக்கெட் பற்றி ஒரு செய்தி இல்லை.

2.கடை அடைப்பு யாருக்கு.? அது வெற்றி என்று ஒரு தொலைக்காட்சியும் (மக்கள்).அது தோல்வி என்று ஒரு இனத்தாரும் (ராஜ்,சன்,கலைஞர்.ஜெயா ).
தேடி சென்று பேட்டி வேறு.

3.பல போராட்டங்கள் பல உண்ணாவிரதம் எல்லாம் துளி துளியாக ..(விரைவில் காய்ந்து விடும்) ஒன்று சேர்ந்து பெரும் வெள்ளமாக மாற தடை என்ன.

4.ஒரு இனத்தார் "இலங்கை தமிழர் பாதுக்கப்பு இயக்கம்" உருவாகிறது.
மற்றொரு "இனம் இலங்கை தமிழர் நலன் உரிமை பேரவை ".காரணம் அவன் சொல்லி நான் என்ன கேட்கவேண்டு.இந்த இரு அமைப்புமே ஒருவர்க்கு ஒருவர் போட்டியிடுவதில் தான் அதிக நாட்டம் காட்டும் ஒழிய .மக்களை காக்குமா என்பது
கேள்வி குறி.?

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது .சிறிதளவாவது மனதில் இருந்தால் .எந்த இனமும் அழிந்ததாக சரித்தரம் இல்லை.

உதாரணம் யூதர் இனம்.நாடே இல்லாமல் இருந்த யூதர் இனம் .பல இன படுகொலைகளை சந்தித்த அந்த இனம் .தன் ஒற்றுமையால் உலகிலே பெரிய வல்லரசாக மாறி உள்ளது .

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

உலக வஞ்சகர்களும் 2,50,000 போர் விரர்களும்

48 மணி நேர போர் நிறுத்தம் தெரிவித்தும் ,பொது மக்கள் களத்தை விட்டு ,வெளி வர மறுத்து விட்டார்களா.
இங்கு நம் மூட அமைச்சர்கள் ,எங்களால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது .
எல்லா பொது மக்களும் பாதுகாப்பான் இடத்துக்கு குடி பெயருங்கள் என்று சொல்கிறார்கள்!.வன்னியில் இருந்து ஒலிக்கும் குரல்..எங்கே அந்த பாதுக்காப்பான இடம் .என்று.?இங்கு சட்டசபையில் உள்ள குருடர்கள் மற்றும் செவிடர்கள் காதில் விலவா செய்யும் .? இல்லை.
மற்ற நாட்டு தலைவர்களுக்கு இருக்கும் சிறிதளவு அறிவு நம் தலைவர்களுக்கு இல்லை.?மந்தமான ஐ. நா வுக்கே! ..அங்கே ஒரு பாதுகாப்பான இடம் என்று ஒன்று இல்லை என்று தெரியும் போது.அருகே இருக்கும் நம் வீர தமிழ் அரசியல் வாதிகளுக்கு தெரியவில்லையே .?

இப்பொழுது வெளியான செய்தியின் படி ,இலங்கை ராணுவத்துக்கு எதிரான் தாக்குதலில் பொதுமக்களும் பங்குபெற்றார்கள் என்று கேட்கும் போது .என் நெஞ்சில் ..தோன்றும் அலை
1.அமெரிக்க புரட்சி போர் -1775 -1783.
2.வியட்நாம் போர் .1959 -1979.
3.இந்திய சுதந்திர போர் 1857.

என்ற வெற்றி பட்டியலில்..இதுவும் சேரும்..

என்ன விலை கொடுத்தாலும் நம் பூமியைய் எதிரிகளிடம் இருந்து காப்பற்றிய தீருவோம்.இல்லையெனில் இந்த பூமியிலேயே நிரந்தரமாக புதைபடுவோம் என்று.!!.வீர முழக்கம் உலகை அதிர வைக்கிறது .